நடிகை ரம்பா யாழ். விஜயம்!

பிரபல தென்னிந்திய நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு விசேட வழிபாடுகளிலும்  ஈடுபட்டார்.

நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார். இவரின் முயற்சியால்  யாழில்  நொதேர்ன் யுனி தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நொதேர்ன் யுனியின் அனுசரணையில் எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் பிரபல  தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.