முகப்புத்தக பாவனையினால் 17 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை..!

17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அந்த கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய தொலைபேசி பழுதுபார்க்கும் நபர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியொருவர் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் தனது தொலைபேசியை பழுது பார்க்க கொடுத்து சில மணித்தியாலங்களின் பின்னர் அதனை வாங்கியுள்ளார்.

இதன்போது கைத்தொலைபேசியை சோதித்த போது தொலைபேசியில் இருந்து தனது முகநூல் கணக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன நீக்கப்பட்டிருந்தமையினால் மீண்டும் குறித்த நபரிடம் கூறி புதிய மின்னஞ்சல் முகவரி, முகநூல் கணக்கென்பனவற்றினை உருவாக்கியுள்ளார்.

 

முகப்புத்தக பாவனையினால் 17 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை..! வெளியாகிய பகீர் தகவல் | Stealing Facebook Account Advertising Girl Sale

இரண்டு நாட்களுக்குப் பிறகு, பலர் சிறுமியை தொலைபேசியில் அழைத்து, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பைத்தியக்காரத்தனமான விஷயங்களைச் செய்யாதீர்கள்” என்று திட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சந்தேகமுற்று சிறுமியின் முகப்புத்தக கணக்கினை சோதித்த போது காசுக்காக விற்பனை செய்பவர் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், சிறுமியின் முகப்புத்தக கணக்கினை பின் தொடர்ந்தவர்கள் நிர்வாண புகைப்படங்கள் அடங்கிய விளம்பரத்தை அவருக்கு அனுப்பிய நிலையில்,சிறுமி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், தொலைபேசி பழுதுபார்க்கும் நபருக்கெதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.