இணையம் மூலம் வங்கி பண பரிமாற்றம் செய்பவர்களுக்கு முக்கிய தகவல்

இணையவழி பண மோசடி தொடர்பில் 8 சந்தேகநபர்கள் நிதி மற்றும் வர்த்தக குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனியார் வங்கி ஒன்றின் இரண்டு கணக்குகளை இணைய வங்கி பரிவர்த்தனை வசதிகள் ஊடாக ஊடுருவப்பட்டுள்ளது.

இதன் மூலம் 13,765,000 ரூபாய் மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

அதற்கமைய, கடந்த 26ஆம் திகதி நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாதுவ, பிலியந்தலை, பண்டாரவளை மற்றும் காலி ஆகிய இடங்களில் இடம்பெற்ற பண மோசடிச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காலி, வெலிகம, ரத்கம, வாதுவ மற்றும் பட்டியகெதர ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 22 மற்றும் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்