மேலும் ஒரு பதக்கம் வென்ற இலங்கை

ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டியில் 20 வயதுக்குட்பட்ட  ஆண்களுக்கான 4×400 மீற்ற ஓட்டப்போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.

இந்த செம்பியன்ஷிப்  போட்டியில் இலங்கை வென்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் குறித்த போட்டி இடம்பெற்று வருகிறது.