கால்பந்தாட்ட கிண்ணம் 2024 தொடரில் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவான யாழ் அணி

தற்போது நடைபெற்று வருகின்ற அகில இலங்கை ரீதியிலான லங்கா கால்பந்தாட்ட கிண்ணம் 2024 தொடரில் இன்று நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் களுத்துறை மாவட்ட அணியை எதிர்கொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட அணி 3- 2 என்ற கோல்கள் அடிப்படையில் அபார வெற்றி பெற்று லங்கா கிண்ணத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.