தாய்ப்பாலை நிறுத்துவதற்கு முன்பு என்ன செய்யணும் அம்மாக்கள் தெரிஞ்சுக்கணும்!

தாய்ப்பாலால் குழந்தைக்கும் இளந்தாய்க்கும் எவ்வளவு மகிழ்ச்சி தருகிறதோ அதற்கேற்ப தாய்ப்பாலை நிறுத்தும் போது மகிழ்ச்சிக்கு மாற்றாக சங்கடங்களை தரும். கர்ப்பக்காலத்தில் இருந்து பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தை நாடும் கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்ததும் கூட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவேண்டி ஆரோக்கியமான உணவை மட்டும் எடுத்துகொள்வார்கள்.

அதே போன்று குழந்தைக்கு 2 வயது நிறைவடைய துவங்கும் முன்பு தாய்ப்பாலை நிறுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மார்பகங்கள் கர்ப்பக்காலத்தில் தாய்ப்பால் சுரப்பை ஊக்குவித்தாலும் தானாகவே தாய்ப்பால் நிறுத்தம் செய்யாது. இளந்தாயின் உடலில் சுரக்கும் புரோலாக்டின் என்கிற ஹார்மோன் சுரந்துகொண்டே இருக்கும். இதுதான் பால் சுரப்பு உருவாக்கும். இந்த சுரப்பு தானாக குறையாது. ஆனால் குழந்தை வளர வளர திட உணவை கொடுக்க தொடங்கியதும், தாய்ப்பால் குடிப்பதை குறைத்துகொள்வார்கள்.

அதே நேரம் தாய்ப்பால் நிறுத்த முயற்சிக்கும் போது முதலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் இடைவெளியை அதிகப்படுத்த வேண்டும். தினமும் 5 வேளை என்றிருப்பதை 3 வேளையாக குறைக்க வேண்டும். பிறகு இரண்டு வேளையாக குறைக்க வேண்டும். இறுதியாக ஒரு முறை மட்டுமே கொடுக்க வேண்டும். அதையும் குறைத்து இரண்டு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கொடுக்க வேண்டும். இடையில் தாய்ப்பாலுக்கு மாற்றாக புட்டிபால் இடையில் மருத்துவரை அணுகி தாய்ப்பால் சுரப்பை கட்டுப்படுத்த ஆலோசனைகள் செய்யலாம்.

தாய்ப்பால் சுரப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை அவர் பரிந்துரைப்பார். மாத்திரைகள் எடுத்துகொள்ளும் போது மார்பில் வலி, பால் கட்டுதல், பால் கசிவது, மார்பில் கூச்சம் போன்றவை உண்டாகும். காய்ச்சல், உடல்வலி சோர்வு போன்றவையும் உண்டாகக்கூடும். சிலர் மார்பகத்தை இறுக்கமாக கட்டிவைப்பார்கள். மார்பகத்தை வழக்கத்துக்கு மாறாக கஷ்டப்படுத்தும் போது அவை மேலும் பாதிப்பை உண்டாக்கும். மார்பகத்தில் மடி வீக்கம் உண்டாகவும் கூடும். அதனால் தாய்ப்பாலை மறக்கடிக்கும் போது மார்பகத்தை இயல்பாக வைத்திருக்கவே முயற்சிக்க வேண்டும்.

குழந்தை அவ்வபோது தாய்ப்பாலுக்கு அழுது அடம்பிடிப்பதை போலவே நீங்களும் தனிமைப்படுவதை போன்று விரும்புவீர்கள். அதனால் மனதளவில் நீங்களும் தயாராக வேண்டும். குழந்தையை வீட்டு பெரியவர்களிடம் ஒப்படைத்து குழந்தையின் மனதை மாற்ற விளையாட்டு காட்டி பழக்க வேண்டும். இதனால் குழந்தை தாய்ப்பாலை மறக்க வாய்ப்புண்டு. இரண்டு நாள்கள் வரை குழந்தை தாயை மறந்திருந்தால் கூட தாய்ப்பால் நினைவுக்கு வராது. அதே போன்று தாயும் கூட குழந்தையிடமிருந்து விலகி, வேறு விஷயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் நீங்களும் தயாராக முடியும்.

அதிகளவு தாய்ப்பால் சுரக்க காய்கறிகள், பழங்கள், கீரைகள், திரவ உணவுகள் எடுத்துகொள்வதை போன்று தாய்ப்பாலுக்கு பிறகும் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தாய்ப்பால் சுரக்கும் என்ற அச்சம் தேவையில்லை. மாறாக உடலுக்கு ஆரொக்கியம் கிடைக்கும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.