ஆலையடிவேம்பு படைப்பான ”தாயகமே விழித்திடு” இலங்கையின் புரட்சி பாடல் முதல் பார்வை…

நம் நாட்டவர்களின் படைப்பாக ”தாயகமே விழித்திடு” இலங்கையின் புரட்சி பாடலின் முதல் பார்வை சமுகத்தளங்களில் வெளியிடப்பட்டு பாடலிக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.

”தாயகமே விழித்திடு” என உபதலைப்பிடப்பட்ட இந்த பாடல் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பினை சேர்ந்த கலைஞர்களால் முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட படைப்பு என்பது சிறப்புக்குரியது.

பாடலுக்கான இசையினை S.கிருஷ், பாடலுக்கான வரிகளை V.T.செல்வி, பாடலை பாடியவர்கள் – A.கிஷோர், M.ஜினோச், V.T.செல்வி, M.ரம்மியா S.ஜதுர்சா மேலும் Mastering and Mixing A.R.ஜுவான் மற்றும் பாடல்தொகுப்பினை S.ரதன் அவர்களும் மேற்கொண்டுள்ளனர்.

எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ள இந்த படைப்பு வருகின்ற MAY-01 வெளியாகும் என பாடல்குழு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்