கருப்பா இருக்கிறவங்க ஒரே மாசத்துல கலரா மாற இதை செய்யுங்க? ஆனா…

பார்த்து பார்த்து அழகு பராமரிப்பு செய்தாலும் சமயங்களில் அவை குறையை ஏற்படுத்தவே செய்கின்றது. குறிப்பாக வெயில் நேரடியாக படும் இடங்கள் அதிகளவு கருமையை சந்திக்கவே செய்கின்றன. இந்த கருப்பு நிறம் கொண்ட இடங்கள் பார்க்கவும் அசிங்கமாக இருக்கும். இதற்கு தனியாக நேரம் ஒதுக்கி உரிய முறையில் பராமரித்தால் அந்த இடங்களும் பளிச் என்று பொலிவாக இருக்கும். முகம், கழுத்து முன் பக்கம் பின்பக்கம், கைகள், கால்கள் போன்றவைதான் அதிகப்படியான கருமையை சந்திக்கும் இடங்கள். இதை எப்படி போக்குவது தெரிந்துகொள்வோம்.

சாம்பார் வெங்காயம்

samayam tamil

கூந்தலின் வளர்ச்சியை உறுதி செய்யும் சாம்பார் வெங்காயம் தோலின் நிறத்தையும் மீட்டு கொடுக்கும். ஆய்வு ஒன்றில் சிவப்பு நிற வெங்காயமானது மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் திறனை கொண்டிருப்பதால் தோல் நிறத்தை மீட்டு கொடுக்கும்.

வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து தோலின் மீது தடவி வேண்டும். நீர் விடாமல் அரைக்கவும். பிறகு அதை கழுத்து, கை என கருப்பு அதிகமாக இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவவும். பருக்கள் மரு இருக்கும் பகுதியில் இலேசாக எரிச்சலை உண்டாக்கினாலும் கூட இவை தீவிரமாகாமல் இருக்கவும் வெங்காயச்சாறு உதவும்.

​சாம்பார் வெங்காயம்

samayam tamil

கூந்தலின் வளர்ச்சியை உறுதி செய்யும் சாம்பார் வெங்காயம் தோலின் நிறத்தையும் மீட்டு கொடுக்கும். ஆய்வு ஒன்றில் சிவப்பு நிற வெங்காயமானது மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் திறனை கொண்டிருப்பதால் தோல் நிறத்தை மீட்டு கொடுக்கும்.

வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து தோலின் மீது தடவி வேண்டும். நீர் விடாமல் அரைக்கவும். பிறகு அதை கழுத்து, கை என கருப்பு அதிகமாக இருக்கும் இடத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து மிதமான நீரில் கழுவவும். பருக்கள் மரு இருக்கும் பகுதியில் இலேசாக எரிச்சலை உண்டாக்கினாலும் கூட இவை தீவிரமாகாமல் இருக்கவும் வெங்காயச்சாறு உதவும்.

தயிர்

samayam tamil

தயிர் தோலுக்கு ஒவ்வாமையை தருகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பாலை தயிராக்கும் போது தயிரில் உருவாகும் புரோபயாட்டிக் இருக்கிறது. இவை உடல் உள்ளுக்கும் சருமத்துக்கும் நன்மை தருகிறது. அதிக ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கும் தயிர் தோலின் கருமையையும் கூடுதலாக கரும்புள்ளிகளையும் அகற்றி சருமத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

கெட்டியான தயிரில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி பேஸ்ட் போல் ஆகும் வரை கருப்பு நிறம் இருக்கும் தோலின் மீது தடவி அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் தோலின் கருமை மறையத்தொடங்கும்.

அதிமதுரம்பொடி

samayam tamil

அதிமதுரப்பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அந்த பொடி தயாரிக்கும் முறையை ஏற்கனவே நாம் கொடுத்திருக்கிறோம். அதிமதுரப்பொடியை கற்றாழை ஜெல் அல்லது பன்னீருடன் குழைத்து பேஸ்ட் போல் ஆக்கி கருப்பு நிறமிருக்கும் தோல் பகுதியின் மீது தடவி காய்ந்ததும் கழுவி வர வேண்டும். உடனடி பலன் கிடைக்காது என்றாலும் தொடர்ந்து ஒரு மாதம் வரை இதை தடவி வந்தால் தோலின் நிறம் மாறுவதை காணலாம்.

குறிப்பு

அதிமதுரம் குறித்த ஆய்வு மேற்கொண்டதில் அவை சருமத்துக்கும் அதிகப்படியான நன்மைகளை தருகிறது. அதிமதுரத்தில் இருக்கும் டைரோசின் , கிளாபிரிடின் தோலின் நிறம் மாறாமல் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.

பழத்தோல்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, சாத்துக்குடி போன்ற பழங்களின் தோல்களை காயவைத்து பொடித்து வைத்துகொள்ளவும். தினமும் ஒரு டீஸ்பூன் பொடியை பாலில் குழைத்து தோலில் பூசி குளித்துவந்தால் போதும். தினமும் குளிப்பதற்கு முன்பு இதை தடவி வந்தால் நாளடைவில் தோலின் நிறம் மாறுவதையும் மிருதுவாக மாறுவதையும் பார்க்கலாம். பாலுக்கு மாற்றாக ஆப்பிள் சீட வினிகர் கலந்து தேய்க்கலாம்.

 

வைட்டமின் சி நிறைந்த பழங்களில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருக்கிறது. இவை நமது சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்திருக்கிறது.எளிமையான முறையில் இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை மீட்டெடுக்கும் இந்த பொருள்கள் நிச்சயம் கழுத்து மற்றும் உடலின் கருப்பு நிறத்தை மாற்றக்கூடியவையே.

இயல்பான நிறம் கருப்பாக மாறியிருந்தால் நிறத்தை மீட்டெடுக்கலாம். ஆனால் இயற்கை நிறத்தை மீட்டெடுக்க முடியாது. பளிச் என்று மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.