இடர்கால நிதிக்கு இரண்டு மில்லியன் ரூபாயை தனது சொந்த நிதியில் நலன்புரி சங்கத்திற்கு அன்பளிப்பிட்டார் சாணக்கியன் சம்பந்தன் ஐயா.

தள்ளாடும் வயதில் எத்தனை விமர்சனங்கள் ,அவபெயர்கள், அரச கூலிபடைகளின்
கேலிகைகள், கோமளி சித்திரங்கள், ஓர் ஊடகத்தின் விமர்சனங்கள், இவருக்கு யாரும்
போட்டியில்லை என்றபோதிலும் இவரை தமக்கான போட்டியாளர் என கருதும் அரசியல்
புதுமுகங்களின் வஞ்சிப்புகள் இதனை எல்லாம் தனது படிக்கட்டாக பயன்படுத்தி
வாழ்நாள் அரசியல் சாணக்கியத்தின் மூலம் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்
மக்களுக்கு அற்பணித்து செயல்புரியும் இந்த மண்ணின் மன்னன் தான் இவ்வுலகு
ஏற்கும் ஈழ தமிழனின் தந்தை இராஜவரோதயம் சம்பந்தன்.தந்தை செல்வாவால் தெரிந்தெடுக்கபட்ட முத்து, எம் தீர்க்க தருசன தலைவனால்
தெரிவிடபட்ட தலைமை. அன்றிலிருந்து இன்றுவரை அவருக்கு என்ற ஓர் கொள்கை .
சிலவேலைகளில் இவரது எதிர்பார்ப்புகள் சாதக தன்மையை தராது விட்டாலும்
எதிர்காலம் அதற்கான பதிலை சொல்லும் நிலையை தோற்றுவிக்கும்.

இவரது தனிபட்ட வாழ்வில் சாதித்தது என்ன வென்றல் இன்று அது பூச்சியம். எளிமையான
வாழ்வு. அரசியல் வருகையின் பின்னர் தனது இளமை காலத்தில் உழைத்ததையும், தனது
பரம்பரை சொத்துகளை இழந்ததுமையே இவர் கண்ட சாதனை.

இன்றைய காலத்தில் இவ்வாறன இடர்நிதிக்காக தனது பணத்திலிருந்து இவ்வாறன பாரிய
நிதியினை அன்பளிப்பு செய்த வடக்கு, கிழக்கு மாகாணத்தின் ஓர் அரசியல்வாதி
என்றல் நான் அறிந்த வரையில் சம்பந்தன் ஐயா மண்டுமே. இது அவரால் இன்றுவரை
யாரிடமும் கூறியதில்லை.

எதிர்வரும் தேர்தல் காலதாமதத்தின் பின்னரே நடைபெறும் என்ற உண்மையை அறிந்த இவர்
மற்ற அரசியல் தலைமைகள் போல் இல்லாது இவர் ஓர் முன்மாதிரி அரசியல் தலைவராக
செயற்பட்டுள்ளார். இவரை பின்பற்றும் சிறந்த அரசியல் தலைவர்கள் செயலாற்ற
வேண்டும் என்பதற்காகவே எமது இந்த பதிவு.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.