எடை குறைய OMAD டயட்டில் எத்தனை வகை இருக்கு?… அதில் உங்களுக்கு எது சூட்டாகும்…

One Meal A Day எனப்படும் ஆங்கில வார்த்தையின் சுருக்கமே OMAD எனப்படுவது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே சாப்பாடு என்கிற ஒரு வகை உணவு கட்டுப்பாடு வகையாகும். இந்த உணவுக் கட்டுப்பாடு வகை இப்பொழுது உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. உலகம் முழுவதிலும் அதிக எடை உள்ள பெரும்பாலான மக்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டுமென்று முயற்சி செய்து வருகின்றனர்.

 

அவர்கள் பலவழிகளில் உணவுக் கட்டுப்பாடு உடற்பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். உணவுக்கட்டுப்பாடும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போன்று முயற்சி செய்கிறார்கள். சிலர் தங்களுக்கு பிடித்த உணவை தியாகம் செய்ய இயலாது. அப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு நாளைக்கு ஒரு நேர உணவு என்கிற உணவு கட்டுப்பாட்டை தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால் இந்த ஒரு நாளைக்கு ஒரு நேர உணவு கட்டுப்பாட்டில் ஒரு நேரத்தில் அவர்களுக்கு பிடித்த அனைத்தையும் உண்டு மகிழலாம்.

 

ஆனால் அடுத்த 24 மணி நேரங்கள் அவர்கள் சாப்பிடக்கூடாது. இப்படி ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே உண்டு உடலை குறைக்க உதவும் இந்த உணவு கட்டுப்பாட்டில் சில வகைகள் இருக்கிறது அதைப்பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

​ketomad (கீடோ மேட்)

samayam tamil

இந்த ஒரு நாளைக்கு ஒரு நேர உணவு வகைகளில் நாம் முதலில் பார்க்க போகிறது இந்த கீட்டோ மேட் எனப்படும். இந்த வகை பற்றி இதில் ஒரு நாளைக்கு ஒரு நேரம் நீங்கள் சாப்பிட வேண்டும். இருந்தாலும் மதிய உணவில் கார்போஹைட்ரேட் அளவானது குறைவாக இருக்க வேண்டும். ஆனால் கொழுப்புச் சத்து மிகவும் அதிகமாக இருக்க வேண்டும். சரியான அளவு புரோட்டின் இருக்க வேண்டும். நீங்கள் அசைவத்தில் கறி வகைகளை சாப்பிடலாம். முட்டைகள் சாப்பிடலாம் மீன் சாப்பிடலாம். சிக்கன் சாப்பிடலாம். அனைத்து காய்கறிகள் சாப்பிடலாம் அவகேடோ மற்றும் மற்ற அனைத்து விதமான கொழுப்பு சத்துக்களையும் சாப்பிடலாம். ஆனால் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி சப்பாத்தி போன்ற உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார் பரோட்டா, பிரட் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும். இந்த வகை விரைவாக எடையை குறைப்பதற்கு உதவுகின்றது என்று கூறுகின்றனர்.

​Carbomad (கார்போ மேட்)

samayam tamil

இந்த வகையில் அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ள உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த ஒரு நாளைக்கு ஒரு நேர உணவு கட்டுப்பாட்டில் இந்த இரண்டாவது வகை மிகவும் வித்தியாசமானது. பொதுவாக உணவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் கார்போஹைட்ரேட் அதிகமாக சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் இந்த வகையில் கார்போஹைட்ரேட் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று கூறுகிறார்கள். இதில் நாம் சாப்பிடும் அந்த ஒரு நேர உணவில் கிட்டத்தட்ட 60% கார்போஹைட்ரேட் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி 60 சதவீத கார்போஹைட்ரேட் அந்த உணவில் இருக்கும்.

ஆனால் நாம் ஏற்கனவே ஒரு நேரம் மட்டும் சாப்பிட்டு இருப்போம் அதிகமான பசியும் எடுத்திருக்கும். இதனால் உடலில் கேட்ட பால்சம், என்கிற ஒன்று உருவாகிறது நிச்சயமாக நீங்கள் உங்கள் புரதத்தையும் அதிகரிக்க வேண்டும். இருந்தாலும் இதுபோன்று சாப்பிட்டு வரும் பொழுது நல்ல பலன் கிடைக்கும் என்று கூறுகின்றனர். தினமும் நாம் சாதாரணமாக சாப்பிடும் உணவுகளில் 30 முதல் 50 சதவீத கார்போஹைட்ரேட் இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் நாம் இதில் கூறிய இந்த வகை உணவு கட்டுபாட்டில் 60% எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர் நிச்சயமாக ஒரு நாளைக்கு ஒரு நேரம் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்ற நேரங்களில் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும் என்பது கண்டிப்பான கட்டுப்பாடு.

​ZeroMad (ஜீரோ மேட் )

samayam tamil

இந்த மூன்றாம் வகை உணவு கட்டுப்பாடு மேலே குறிப்பிட்ட கார்போஹைட்ரேட் மற்றும் பிராட் முற்றிலுமாக இருக்காது. இந்த வகையில் புரோட்டீன்கள் தான் நாம் அதிகமாக சாப்பிடவேண்டும் இது பலருக்கும் சற்று கடினமாக காரியமாக உள்ளது. ஏனென்றால் புரோட்டீன்கள் நாம் விரும்பி சாப்பிடக்கூடிய அரிசி கோதுமை போன்ற விஷயங்களில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. புரோட்டீன்கள் உள்ள உணவு ஆரோக்கியமான உணவாக காணப்படுகிறது.

ஆனால் இந்த வகை உணவு கட்டுப்பாடு அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்று கூறுகின்றனர். நாள் முழுவதும் சாப்பிடாமல் ஒரே நேரத்தில் அதிகமான புரோட்டீன்கள் சாப்பிடுவதால் உடலில் குளுக்கோஸ் ஜெனிசிஸ் என்கிற பாதிப்பு உள்ளாகிறது. இது ஒரு சில பிரச்சினைகளை கொண்டு வருகிறது என்று கூறுகின்றனர். ஆனால் உடல் எடையை வேகமாக குறைக்க இது பெருமளவில் உதவி செய்கிறது என்று கூறுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்