திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் பெண்களின் வாழ்க்கையில் இவ்வளவு நன்மையா? – புதிய கருத்துக்கணிப்பு!!!

காதல், திருமணம் போன்றவைகளில் பெண்களின் கருத்துக்கள் முந்தைய தலைமுறை போல் இல்லை. முற்றிலும் மாறுபட்ட எண்ணங்கள் அவர்களிடையே உருவாகியிருக்கிறது. அதை வெளிப்படுத்துகிறது இந்த புதிய கருத்துக்கணிப்பு. 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இதில் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள்.

‘நீங்கள் காதல்வசப்பட்டிருந்தால், என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற தைரியத்தோடு பெற்றோரிடம் காதலை வெளிப்படுத்துவீர்களா?’ என்ற கேள்விக்கு பெண்கள் அளித்திருக்கும் பதில்!

 

எதைப் பற்றியும் கவலைப்படாமல் தைரியமாக காதலை பெற்றோரிடம் வெளிப்படுத்திவிடுவோம் என்று 68 சதவீதத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

சூழ்நிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் மட்டுமே நிதானமாக வாயை திறப்போம் என்பது 27 சதவீதத்தினரின் கருத்தாக இருக்கிறது.

5 சதவீதத்தினர் வீட்டில் சொல்லவே மாட்டோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

(காதலிக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் காதலை வீட்டில் சொல்லும் தைரியத்துடனே இருக்கிறார்கள் என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்)

‘உங்கள் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்கு..

குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் காதலை அப்போதே கைவிட்டுவிடுவேன் என்பது 9 சதவீதத்தினரின் கருத்து.

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு சம்மதம் தெரிவித்து அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைத்துவிடுவேன் என்பது 13 சதவீதத்தினரின் பதில்.

67 சதவீத பெண்கள் பெற்றோருக்கு எடுத்துச்சொல்லி காதலை புரியவைக்கும் முயற்சியில் ஈடுபடுவோம் என்கிறார்கள்.

9 சதவீதத்தினர் பெற்றோரை மிரட்டி பணியவைக்க முயற்சிப்போம் என்றும், 2 சதவீதத்தினர் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் கருத்து பகிர்ந்திருக்கிறார்கள்.

‘திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் லிவிங் டுகெதர் ஜோடிகளை பற்றிய கருத்து என்ன?’ என்ற கேள்விக்கு சுவாரசியமாக பதிலளித்திருக்கிறார்கள்!

மாறிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற புதிய வாழ்க்கைமுறை உருவாகத்தான் செய்யும் என்பது 14 சதவீத பெண்களின் கருத்து.

சிறிது காலம் அப்படி வாழ்ந்து பார்த்துவிட்டு, பிடித்தால் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையை தொடரலாம் என்பது 24 சதவீதத்தினர் கருத்து.

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையே தவறு என்று 60 சதவீத பெண்கள் ஆணித்தரமாக பதிலளித்திருக்கிறார்கள்.

2 சதவீதத்தினர் அந்த வாழ்க்கையையும் வாழ்ந்து பார்த்துவிடலாம் என்று அதிரடி காட்டியிருக்கிறார்கள்.

‘உங்களுக்கு திருமணம் முடிந்ததும், கணவருக்கு பழைய காதல் தொடர்புகள் ஏதேனும் இருந்ததா என்று தோண்டித்துருவுவீர்களா?’ என்ற கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் வித்தியாசமானது.

61 சதவீதத்தினர் அதை அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை என்று, பக்குவமாக கூறியிருக்கிறார்கள்.

19 சதவீதத்தினர் நேரம் பார்த்து நிதானமாக அதை கேட்டு தெரிந்துகொள்வோம் என்றிருக்கிறார்கள்.

15 சதவீதத்தினர், ‘பழையது எதுவாக இருந்தாலும் அதை மறந்துவிடுங்கள். இனி புதிய வாழ்க்கையை தொடங்குவோம்’ என்று கூறுவார்களாம்.

5 சதவீதத்தினர் அதை உடனே கேட்டு தெரிந்துகொண்டால்தான் மனம் அமைதியடையும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

தனியார் அமைப்பு ஒன்று எடுத்திருக்கும் இந்த சர்வே இன்றைய இளம் பெண்களின் மாறிவரும் மனோநிலையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்