முருகேசு பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கிழக்கு, சித்தன்கேணி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு பத்மநாதன் அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவமயம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  சிவபதிஅம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும், ஆலவன், ஆதிபன், அகிலவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சபாநாதன் மற்றும் சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கஜேந்தினி, துஷாரகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற எதிர்மன்னசிங்கம், வசந்தா, பத்மினி, ஸ்கந்தமயம், திருவம்பலமயம், அருள்மயம், மகாமயம், லிங்கமயம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், லீலாவதி, லோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, சாவித்திரி, சிவரஞ்சனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், டிஷாந்தினி, பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும், காலஞ்சென்ற ஆனந்தவேல் மற்றும் சிறிசக்திவேல், ஜெயவேல், சங்கரவேல், சிவமதி, சிவரூபவேல், முருகவேல், பத்மாவதி, பரமவேல், கெளரி, மலர்விழி, சிறீராம், ரம்யா, ரகுராம், சிவரோசன், சிவவிதுசன், நவநிதா, நர்மதா, சிவராம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், அட்சயன், ஆதிரன், அகத்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஸ்கந்தமயம் – மைத்துனர்
Contact Request Details
ஆலவன் – மகன்
Mobile : +447958549724
ஆதிபன் – மகன்
Mobile : +15192427008

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.