மிருகக் காட்சி சாலையில் காட்சிப்படுத்தப்பட்ட ஹிட்லரின் முதலை!
இரண்டாம் உலகப் போரின் போது கைப்பற்றப்பட்ட ஹிட்லர் வளர்த்த முதலை பதப்படுத்தப்பட்டு ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ மிருகக்காட்சிசாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹிட்லர் வளர்த்ததாகக் கூறப்படும் முதலை அவரது மரணத்திற்குப் பின் ரஷ்யாவில் வளர்க்கப்பட்டு வந்தது. சட்டர்ன்(Saturn) என பெயரிடப்பட்ட குறித்த முதலையானது தனது 84ஆவது வயதில் கடந்த மே மாதம் உயிரிழந்தது.
இதையடுத்து அதன் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு பதப்படுத்தப்பட்டது. தற்போது இந்த முதலையின் உடல் மாஸ்கோவிலுள்ள மிருகக்காட்சிசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை