தனக்கு 105 குழந்தைகள் வேண்டும் என கூறும் பெண்…

ஜோர்ஜியா  நாட்டில் கோடீஸ்வர கணவருடன் வசிக்கும் பெண்ணுக்கு தற்போது வரை 11 குழந்தைகள் உள்ள நிலையில் 105 குழந்தைகள் தனக்கு வேண்டும் என கூறியுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்ட்ருக். இவரின் கோடீஸ்வர கணவர் கலிப். தம்பதிகள் ஜோர்ஜியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது வரை இவர்களுக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இதில் கிறிஸ்டினா 1 குழந்தையை மட்டுமே இயற்கையாக பெற்றெடுத்தார்.

மற்ற 10 குழந்தைகளும் வாடகை தாய் மூலம் பெற்றெடுக்கப்பட்டது. கிறிஸ்டினா கூறுகையில், எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும், 105 குழந்தைகளை பெற நான் விரும்புகிறேன்.

தற்போது வரை 1 குழந்தை மட்டுமே நான் இயற்கையாக பெற்றெடுத்தேன். மீதமுள்ள குழந்தைகள் என் கணவரிடமிருந்தும் என்னிடமிருந்தும் மரபணு ரீதியாக வாடகைதாய் மூலம் பெற்றெடுக்கப்பட்டதாகும்.

இறுதியாக எனக்கு எத்தனை குழந்தைகள் இருக்கும் என தெரியவில்லை. ஆனால் இத்துடன் நிறுத்துவதற்கு மட்டும் திட்டமில்லை.

வாடகைத் மூலம் பெற்ற 10 குழந்தைகளில் ஒவ்வொருவருக்கும் 8,000 யூரோக்கள் செலவானத என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்