யாழ். திருநெல்வேலி பொதுச் சந்தையின் வியாபாரிகள் 313 பேரிடம் பி.சி.ஆர் சோதனை…

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள், 313 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக இன்று (16) பெறப்பட்டன.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு அங்கமாகவே இன்றையதினம் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளின் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.