வாட்ஸ்சப் எச்சரிக்கை: இதைச் செய்யாவிட்டால் வாட்ஸ்சப் கணக்கு டெலீட் ஆகும். –

வாட்ஸ்அப் அதன் விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையையும் புதுப்பித்து வருகிறது. இதுகுறித்து ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு அறிந்துக் கொள்ளவேண்டியவை குறித்து பார்க்கலாம்.

விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகள்
வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை விரைவில் புதுப்பித்து அமைக்கப்பட உள்ளது.

மேலும் பயனர்கள் வாட்ஸ்அப்பின் தனியுரிமை விதிகளை ஒப்புக் கொள்ளும்படி நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி செய்யாதபட்சத்தில் அணுகலை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட்ட கொள்கைகள் குறித்த தகவல்
வாட்ஸ்அப் மாற்றப்பட்ட கொள்கைகள் குறித்த தகவலை சில பயனர்கள் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி வாட்ஸ்அப் புதிய சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை அடுத்த மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி நேரலைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகளை கண்டிப்பாக ஏற்க வேண்டும்
பயனர்கள் வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும் அப்படி புதிய சேவை விதிமுறைகளை ஏற்க தவறும்பட்சத்தில் பிப்ரவரி 8 முதல் தங்களின் வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது.

Terms and Privacy Policy Updates
வாட்ஸ்அப் இன் Terms and Privacy Policy Updatesஐ கட்டாயம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வாட்ஸ்அப் பயனர்கள் அனைவருக்கும் நோட்டிபிகேஷன் மூலம் இந்த தகவல் அனுப்பப்படுகிறது. இந்த நோட்டிபிகேஷனுக்கு சென்று allow என்பதை தேர்வு செய்து கொடுக்க வேண்டும்.

பிப்ரவரி 8 முதல் நடைமுறை
இந்த அறிவிப்பு பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில் அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்
வாட்ஸ்அப் பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று அப்டேட் செய்ய வேண்டும். பிறகு வாட்ஸ் அப் கணக்கை ஓபன் செய்ய வேண்டும். அப்டேட் செய்து ஓபன் செய்த சில விநாடிகளில் இந்த நோட்டிபிகேஷன் காண்பிக்கப்படுகிறது. இதில் Allow, Not Now என்ற இரண்டு விருப்பம் காண்பிக்கப்படுகிறது. இதல் Allow விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.