மட்டக்களப்பு- தேற்றாத்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- தேற்றாத்தீவு கடற்கரையை அண்டிய வாவிபகுதியில் ஆணொருவரின் சடலம், இன்று (08) கரையொதுங்கியுள்ள நிலையில்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் 60 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இதுவரை அவர் தொடர்பாக எந்ததொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்