(வீடியோ)புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையில் சுப நேரத்தில் நிறைவேற்றப்பட்டது

புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய நிகழ்வு கௌரவ பிரதமர் தலைமையில் சுப நேரத்தில்  நிறைவேற்றப்பட்டது

இந் நிகழ்வு பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (17) காலை  நிகழ்த்தினார்.

காலை 7.16 மணிக்கு தெற்கு திசை நோக்கி  நீல நிற ஆடை அணிந்து தலைக்கு ஆலம் இலை வைத்து ஆலம் சாறு மற்றும் எண்ணெய் வைத்து குளிப்பது இம்முறை புத்தாண்டு சடங்காகும்.

முதலில் புத்த மந்திரயவில் பூஜை வழிபாட்டில் ஈடுபட்ட  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதனை தொடர்ந்து தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வில் ஈடுபட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க மாதன்வல ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய வெல்லகிரிய சுமங்கள தேரர் கௌரவ பிரதமருக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து ஆசீர்வதித்தார்.

உதவி கல்வி பணிப்பாளர் கிரியொருவே தீரானந்த தேரரும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில்  பிரதமரின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் சிரிபால கம்லத் மற்றும்  குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

https://youtu.be/wbEUfuw3k6I

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.