கவிதைக் களம்

நீ பணக்காரிதான் கடல் தாயே – கவிதைக்களம்

நீ பணக்காரிதான் கடல் தாயே - கவிதைக்களம் கவிதை - காரையன் கதன் https://youtu.be/k78-xlEc_iI

மேலும்..

தமிழ் சி என் என் கிழக்கு அலுவலகம் திறந்து இன்றுடன் 02 வருடம் பூர்த்தி – சிறப்பு கவிதை

பாலோடு தேன் சுவையும் பச்சைவயல் மனங்கவரும்க கிழக்கிழங்கை மண்ணதிலும் உதித்தெழுந்த தமிழ் சி என் என்னே... முத்தமிழ்வாழ் விபுலானந்தர் பிறந்த மண்ணாம் காரைதீவில் நிலை கொண்டு பணி நகர்த்தும் எம் ஊடகமே தமிழ் சி என் என்னே ... இரண்டு ஆண்டுகள் உன் பணியை வரிகளுக்குள் சிறையிட முடியாதுதான். உன் பணிகள் தொடர வேண்டும் பல நண்மைகள் நிறைய வேண்டும். தொடர்ந்திடும் ...

மேலும்..

இரவை அதட்டும் குழந்தையின் அழுகை வீதியோரம் கேட்கையிலே – கவிதைக் களம்

முலைப் பால்..... இரவை அதட்டும் குழந்தையின் அழுகை வீதியோரம் கேட்கையிலே... அள்ளி அணைத்து முத்தமிட்டு எடுத்தேன் பாவிகள் யாரோ என்று. உடல் சுகத்தின் சுகம் உள்ளத்தை உசுப்பவில்லை போலும். அழுதபடி குழந்தை தோல் சுருங்கிய என் மார்பில் எமாற்றத்துடன் நானும். ஒரு வயதுக்குழந்தை பக்கத்து வீட்டில் கதவை தட்டினேன். ஆறு ...

மேலும்..

போதை வாழ்வு – கவிதைக் களம்

மின்குமிழ் ஒளியை சுற்றி வாழ்விழக்கும் விட்டில் பூச்சிகள் போல... போதையை தேடித் தேடி வாழ்விழந்து போகும் இளமைகளே... பூமியில் வாழும் வாழ்க்கை ஒரு முறை என்பது யாவரும் அறிந்தவை தானே... மகிழ்விற்கும் போதை சோகத்திற்கும் அதுவே தேவை என்று மனம் சொல்ல உடல் நலம் மறப்பது ...

மேலும்..

FIFAவும் Lifeம்

  உருகுவே வென்றிடுச்சு உள் ரவ்ண்டுக்கு வந்திடுச்சு ஆர்ஜண்டீனா போர்த்துக்கல்லு ஆச்சரியமாய் தோத்திடுச்சே --- ஜேர்மன் வெளியேற மெஸ்ஸி அணி தோற்க ஏதோ மாயம் அரங்கேறும். பெனால்டி அடிப்பதிலே ரொணால்டோ தவற விட பெரிதாய் அது பேசப் படும் அரிதாய் அது நோக்கப் படும். ஒண்ணு ரெண்டு கோல்கள் உலகம் எதிர் பார்க்க ஆர்ஜண்டீனா பிரான்ஸ்கள் ஏழு கோல்கள் போட எதிர் பார்ப்புக் குறைய ஒத்தையாளா ஜப்பான் ...

மேலும்..

27ல் இப்படியும் சிலர்

அள்ளாஹ்வை அழைப்பார் அவுட் ஸ்பீக்கர் போட்டு. எல்லா இடமும் இஷ்டத்துக்குப் பார்க் செய்வார். பள்ளியில் படுத்து பார்ப்பார் முக நூல் பிள்ளைகளை அடக்க பிரம்புடன் சில பேர். கிளிப்பிள்ளை போல கேட்பார் தெளபா. பழையபாவம் புதியபாவம் பாடமாக்கி சொல்வார். வெளிப் பள்ளி விறாந்தையில் வீண் கதை பேசுவார். அலுப்பு வரும் போது அங்கேயே படுப்பார். இடை வேளை நேரம் இரண்டு டீ குடிப்பார். உடையில் துண்டு கொட்ட உண்பார் ...

மேலும்..

மீம்ஸ் மெல்ல எல்லை தாண்ட…

பிடியாத பிக்ஹுக்கு வடிவேலு மீம்ஸ் போட்டு பொடியன்மார் மகிழ்கிறார் புனிதம் புரியாமல். எந்தக் கொள்கைக்கும் ஏதிர்ப்புத் தெரிவிக்க செந்திலின் படமிடுவோர் சிந்திக்க வேண்டாமா பிறை பார்த்தல் பிரச்சினைக்கு பேஷ் புக்கில் நக்கலாய் குறை கூறும் நோக்கில் கூத்தாடி மீம்ஸ் போடல் முறைதானா என்று மூன்று முறை சிந்திப்பீர். மக்களை சிரிப்பூட்ட மார்க்க விடயங்களில் நக்கல் அடித்து நகைச் சுவை செய்தல் தக்க செயலா? தரமான செயலா? நபிகள் நாயகத்தின் நல்ல போதனைகளை நடிகன் ...

மேலும்..

மே 18

மேக கருமுகில்களாய் எம் உறவுகள் கதறித் துடித்தநாள் தமது தாய்மண்ணை முத்தமிட்டு உயிர்விட்ட கொடிய நாள் விடியல் எனும் தாகம் சுமர்ந்து புதையுண்ட இருண்ட நாள் பதுங்கு குழிகளினுள் எம் முகங்கள் கருகி வாடிய நாள் எம் உறவுகளின் மேலே எம் உறவுகளே ஏறி நடந்த இறுதி நாள் கைக் குழந்தை பசியினால் தன் தாயின் மார்பு ...

மேலும்..

வாழ்க்கை -கஞ்சி

வாழ்க்கை சில நேரம் சுவையானது - கோப்பைக் கஞ்சிக்குள் கோழித் துண்டைப் போல, வாழ்க்கை சில நேரம் கடுப்பானது- இதே கஞ்சிக்குள் கடிபடும் ஏலக்காய் போல, வாழ்க்கை அமைதியானது- ஆறிய கஞ்சின் மேல் படரும் ஆடை போல, வாழ்க்கை ஆராவாரமானது- கொதிக்கும் கஞ்சியை குடித்த குமரி போல, வாழ்க்கை கசப்பானது- காய்ச்சப் பழகி கடைசியில் கருகிப் போன கஞ்சி போல, வாழ்க்கை மதிப்பானது- பெஜ் இப்தாரில் பெரிய ரெஸ்டூரண் கஞ்சி போல, வாழ்க்கை மலிவானது- இஷாவுக்குப் பின்னும் எஞ்சியிருக்கும் கஞ்சி ...

மேலும்..

சாரிப் போராளிகள்…

சாரி காக்கப் போராட சாரி சாரியாய் செல்வாரடி பாரு அதில் வேடிக்கை பாதிப்பேர் உடை சல்வாரடி இனம் உடை காக்கவென எழுந்து போராடும் ஆசிரியரே! டெனிம் டீ சேர்ட் அணிந்து வர சனம் கண்டு ஆ..சிரியாரா? வெள்ளைக் கவுண் அணிவது வேதத்தில் உள்ளதாமோ? வெள்ளைக்காரன் சொன்ன உடை. விரும்புவது நல்லதாமோ? பெ'ஷண் முக'ப் பூச்சுக்கள் பெரிய பொட்டு ஸ்டிக்கர்கள் அசல் கலாச்சாரம் ...

மேலும்..

எம்முடையது

முகில் தோய்ந்த வானத்தில் நீந்திக்கொண்டிருந்தாய் ஒரு நட்சத்திரமாய்! நீல அலைக்குள் மடியும் வெள்ள அலை நாம் கூவிக்கத்திய சொற்கள்! உனது நண்பி சென்று திரும்பாத வழியில் எனது தோழனும் பயணப்பட்டுவிட்டான்! தோள் காயங்கள் எமது தேசத்தின் வடுக்கள் என்று யாரும் நம்பப்போவதில்லை! இடித்தரிக்கும் நிழலில் தொலைத்தோம் எமது உள்மனக்கிடக்கையை! அலைந்த துப்பாக்கி முனைக்குள் மடிந்தது மூன்றுகட்டங்கள்! இனி நான்காவது கட்டத்தில் அரசியல் ஆவணத்திலிருந்து தேடிப்பெறுவோம் எமது பட்டாம்பூச்சிகளின் சுதந்திர வெளியை! அதற்கா விடியல் சாற்றும் எதிரில் வளர்ந்துகொண்டிருக்கு நம்பிக்கையானவர்களுக்கு நம்பிக்கை மலைகள்!.. ஜெ..ஈழநிலவன்

மேலும்..

கவனம் மகளே

இனி கவனம் மகளே! இதன் பிறகுதான் நீ நெருப்பின் வழி பயணிக்க வேண்டும்! பிரபஞ்சத்தின் இறுதி தொட்டியில் கனத்தழும் கடைசிக்குரல் கூட பெண்ணதான் இருக்கிறாள்! நீருக்குள் நிலையெடுக்கும் வேரைப்போல் உன்னை சுற்றிசுழலும் உருமாற்றப்பட்ட முகங்கள்! வானம் மூடியிருப்பதாய் எண்ணாதே மேகமெல்லாம் கண் என்று எண்ணிக்கொள்! நம்பிக்கை என்ற அகராதிக்குள் மூடிக்கிடக்கு துரோகத்தின் பக்கங்கள்! மூங்கிலுக்குள் முரண்டு கொள்ளும் காற்றுப்போல் தப்பித்து வெளியேற முடியாது மகளே! சத்தமிடும் கதவு துயரத்தின் குறியீடு ஒவ்வொரு வீட்டிலும் இது ஒரு மீளமுடியா திசை! ஆடை மாற்றும் போது சுவர்களை நம்பாதே சுவர்கள்தான் பல குற்றங்களை மறைத்துக்கொண்டிருக்கு! தொடுதல் ஒரு போதும் தீபோல் இருக்காது இருட்டின் ...

மேலும்..

ஆஷிபா

அன்புணர்வு இல்லாத ஆர் எஸ் எஸ் அயோக்கியன்கள் வன்புணர்வு செய்து வளர்கின்ற பூவின் வாழ்க்கையை முடித்து விட்டான்கள் தாய்க்குப் பிறக்காது நாய்க்குப் பிறந்தவன்களால்தான் இப்படி ஒரு அராஜகத்தை இரக்கமின்றி செய்ய முடியும் பட்டாம் பூச்சி பிடிக்கும் பாலர் வயதுப் பிள்ளையை எட்டு நாளாய் வன்புணர்ந்த இரக்கமில்லா காட்டேரிகளை சுட்டுத் தள்ள வேண்டிய காக்கியே சுவை பார்த்தான் என்பது கெட்டுப் போன ஆட்சியின் கேவலமான பக்க ...

மேலும்..

ஓசோனில் ஓட்டை

ஆகாயம் அதன் நெஞ்சில் ஓர் ஆறாக் காயம் இந்தக் காயம் பகையால் வந்ததல்ல புகையால் வந்தது. காயம் காய்ந்து ஆறிப் போக வேண்டும் தவறினால் இந்தப் பூமி தேய்ந்து நாறிப் போகும் காயத்துக்கு கட்டுப் போட வேண்டியவர்களே காபனை சுட்டுப் போடுவதால் வெங்காய அளவில் இருந்த விஞ்ஞானக் காயம் பெருங் காயமாகி பிரச்சினை தருகிறது. உண்ணும் பெருங்காயம் உடலின் வலி நீக்கும். விண்ணின் பெரும் காயம் மண்ணின் வளி நீக்கும் அதன் மூலம் வாழ்கின்ற வழி நீக்கும். ஓசோனை அழிப்பது ஆசானை ...

மேலும்..

இரண்டு பொம்மைகள் செய்தான்

இலங்கையை இரண்டு கட்சிகள் மாறி ஆட்சிகள் செய்யும்-அவை இரண்டும் உள்ளால் நாட்டை சுரண்டி ஆட்டையைப் போடும் இது நாம் கண்ட உண்மை இது நடக்கின்ற கொடுமை பொய்கள் என்ன போஸ்டர்கள் என்ன நீலம் என்ன பச்சை என்ன ஊழல்கள் செய்யும் போது எல்லாமும் ஒன்றடா தேர்தல் காலம் தேசப் பற்று தெரிவாகி வந்ததும் மோசடி செய்வார் இது ...

மேலும்..