November 28, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கு சபாநாயகர் நன்றிபாராட்டு!

இலங்கைக்கு வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் குறிப்பிட்டார். சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடமாகாண 7 ஆவது பட்டமளிப்பு விழா!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய வடமாகாணத்தின் 7 ஆவது பட்டமளிப்பு விழா யாழ். சாவகச்சேரி 'பூமாரி மண்டபத்தில்' இடம் பெற்றது. இந்த நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை முன்னாள் தலைவரும், இந்து நாகரிகத்துறை பேராசிரியருமான கலாநிதி ...

மேலும்..

மத்திய வங்கியின் நாணய நிலைவறையிலிருந்து 50 இலட்சம் ரூபா மாயமானதை ஏற்றுக்கொள்கிறோம் – நிதி இராஜாங்க அமைச்சர்

மத்திய வங்கியின் 'நாணய வழங்கல் நிலைவறையில்' இருந்து 50 இலட்சம் ரூபா காணாமல் போயுள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கை வெகுவிரையில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். மத்திய வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என நிதி ...

மேலும்..

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞன் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் படங்கள் பொறித்த சட்டை அணிந்து மாவீரர் நாள் நினைவேந்தலில் பங்கேற்ற இளைஞரொருவர் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார். கொடிகாமம் ஐயனார் கோவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து வடிவேல் சுரேஷ் நீக்கம் !

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர்  2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களித்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பசறைத் ...

மேலும்..

காங்கேசன்துறை துறைமுகத்தில் சீமெந்து தூண்கள் திருட்டு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை சந்தேக நபர்கள் திருடியுள்ளனர் . இது தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையினர் மற்றும் , காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என ...

மேலும்..

யாழ்.சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை  (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, நுணாவில் பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

இலங்கையின் பிரச்சனையை தமிழக அரசு புரிந்து கொள்ளவில்லை’- கோவா திரைப்பட விழாவில் முத்தையா முரளிதரன்

இலங்கை உள்நாட்டுப் போரின் போது இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டு அரசுகள் இனக் கலவரத்தைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டன என்று புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் ...

மேலும்..

சிங்கப்பூரில் தொடர்கிறது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான வழக்கு – நீதி அமைச்சர் விஜேதாச

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் எமது கடல் வள சுற்றாடலுக்கும் ஏற்பட்ட பாதுப்புக்கு நஷ்டஈடாக 6,4 பில்லியன் அமெரிக்க டொலர் அறவிட்டுக்கொள்வதற்காக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை தற்போது இடம்பெற்று வருகிறது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

மேலும்..

மஹிந்தவை சந்தித்தார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ஷவை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு 27 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. தனது தனிப்பட்ட விஜயம் காரணமாக இலங்கைக்கு வந்துள்ள நிலையிலேயே மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஃமூன் அப்துல் கையூம் முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

வனவள திணைக்களத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டிருந்தால் விடுவிக்கப்படும் – பவித்ரா

மக்களின் காணிகள் வனவளத்துறை திணைக்களத்தின் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருந்தால் அந்த காணிகள் நிச்சயம் விடுவிக்கப்படும். 1985 ஆம் ஆண்டு காணி வரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. மக்களின் காணிகள் உறுதிப்பத்திரத்துடன் கையளிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

மேலும்..

கொட்டாவையில் இடம்பெற்ற விபத்தில் பெண் பலி !

கொட்டாவை - அத்துருகிரிய அதிவேக வீதியின் 3 ஆவது மைல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்றுள்ளது. எம்பிலிபிட்டிய, செவனகல, பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடுவெல அதிவேக நெடுஞ்சாலையின் ...

மேலும்..

நீரை விற்கவோ, தனியார் மயமாக்கவோ எந்த நோக்கமும் இல்லை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நீரின் தரத்தைப் பாதுகாக்கவும், செலவைக் குறைக்கவும் அரச-தனியார் கூட்டாண்மைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை என்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நீர் வழங்கல் ...

மேலும்..