ஆஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி: தோல்வியை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அகதிகள்

ஆஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி: தோல்வியை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அகதிகள்

“இன்று இரவு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வரவிருக்கும் (ஆஸ்திரேலிய) பிரதமரான அந்தோணி அல்பனீஸிடம் பேசினேன். அவரது தேர்தல் வெற்றிக்கு எனது வாழ்த்துகளை கூறினேன்,” என தாராளவாத தேசிய கூட்டணியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்திருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய தாராளவாத தேசிய கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த நிலையில், தேர்தலில் ஆளும் தாராளவாத தேசிய கூட்டணி தோல்வி அடைந்தது குறித்து பல அகதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள சஜத் அஸ்கரி எனும் ஆப்கானிய அகதி, “ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அகதியாக வந்ததால் சுமார் 15 ஆண்டுகளாக எனது தாயிடமிருந்து நான் பிரிந்திருக்கிறேன். இன்றிரவு (தேர்தல் முடிவு வெளியாகிய நேரம்) நான் அழுதேன், இறுதியாக எனது தாயையும் பிற குடும்ப உறுப்பினர்களையும் பார்ப்பதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியர்களுக்கு நன்றி!

இரக்கம், கண்ணியம், மற்றும் மனிதாபிமானம் வென்றிருக்கிறது ,” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளில் நூற்றுக்கணக்கானோர் தாராளவாத தேசிய கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து சிறைப்படுத்தப்பட்டு இருந்தனர். பல அகதிகள் சுமார் 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்தனர், பலர் விடுவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியமர முடியாத வகையிலான தற்காலிக விசாக்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இவ்வாறு தற்போது தாராளவாத தேசிய கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் பாதிக்கப்பட்ட அகதிகளையே அக்கூட்டணியின் தோல்வியைக் கொண்டாடி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.