எலிசபெத் ராணி பவள விழா’பிளாஸ்டிக்’ சேலை தயாரிப்பு

எலிசபெத் ராணி பவள விழா’பிளாஸ்டிக்’ சேலை தயாரிப்பு
பிரிட்டன் ராணி எலிசபெத்தின் பவள விழாவை முன்னிட்டு இந்திய கலாசாரப் பின்னணியில் ‘பிளாஸ்டிக்’ சேலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி எலிசபெத் முடிசூட்டி, 70 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்களுக்கு பிரமாண்ட விழா, கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. முப்படையினரின் ராணுவ அணிவகுப்பு, பங்கிங்ஹாம் அரண்மனையில் இசை, நடனம் உட்பட ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இறுதி நாளில் பிரமாண்ட பேரணி நடக்க உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பிரத்யேக சேலை அணிந்த பிரமாண்ட பொம்மைகள் இடம் பெற உள்ளன.
இது குறித்து இந்த சேலையை தயாரித்த நுட்குட் நிறுவன இயக்குனர் சிம்மி குப்தா கூறியதாவது:எலிசபெத் ராணியின் பவள விழாவில் மறுசுழற்சி முறையிலான பிளாஸ்டிக் பொருட்கள் மூலம் பிரத்யேக சேலை தயாரிக்கப்பட்டுள்ளது. திருமண கலாசாரத்தை அடிப்படையாக வைத்து இந்த சேலை உருவாக்கப்பட்டுள்ளது. எலிசபெத் ராணியின் பவள விழாவில் இந்த சேலை இடம்பெறுவது எங்களுக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
எலிசபெத் ராணி பவள விழா’பிளாஸ்டிக்’ சேலை தயாரிப்பு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்