மயிரிழையில் தப்பிய மன்னர் சார்லஸ் – நிலைகுலைந்த சம்பவம்
பிரித்தானிய மன்னர் சார்லஸ் பனிச்சறுக்கு விளையாடச் சென்று மரணத்தை அருகில் சந்தித்த திகில் அனுபவம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
1988ஆம் ஆண்டு, மார்ச் மாதம், மன்னர் சார்லஸ், இளவரசி டயானா, இளவரசி சாரா மற்றும் இளவரசரின் நண்பர்கள் சிலர் சுவிட்சர்லாந்துக்கு விடுமுறைக்காக சென்றிருந்தபோது பனிச்சறுக்கு விளையாடச் சென்றுள்ளார்கள்.
அப்போது, பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படாத, ஓரிடத்துக்கு இளவரசர் சார்லஸ், ஒரு வழிகாட்டி, Major Hugh Lindsay, Patti Palmer-Tomkinson என்னும் இளவரசர் சார்லஸின் நண்பர்கள் மற்றும் சுவிஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் ஆகியோர் சென்றிருக்கிறார்கள்.
பனிப்பாறைச் சரிவு
அப்போதே மன்னர் சார்லஸ் பனிச்சறுக்கு விளையாட்டில் கைதேர்ந்தவர். அப்படி அவர்கள் அந்தச் சவால் மிக்க இடத்தில் பனிச்சறுக்கு செய்துகொண்டிருக்கும்போது, திடீரென ஒரு பனிப்பாறைச் சரிவு உருவாகியிருக்கிறது.
அனைவரும் வேகமாக பாதுகாப்பான ஒரு இடம் நோக்கி விரைய, Major Hugh Lindsay மற்றும் Patti Palmer-Tomkinson ஆகிய இருவரும் பனியில் சிக்கியுள்ளனர்.
Palmer-Tomkinsonஇன் கால்களில் பலத்த காயம் ஏற்பட, Lindsayயோ 400 மீற்றர் பள்ளத்தில் விழுந்திருக்கிறார்.
பனி அமர்ந்ததும், சார்லஸ் உட்பட மற்றவர்கள் வேகமாகச் சென்று, பனிக்குள் புதைந்திருந்த இருவரையும் தோண்டி எடுக்க, Lindsay உயிரிழந்திருந்தார்.
Lindsayக்கு அப்போது 34 வயதுதான். அத்துடன், அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்திருக்கிறார்.
மரணத்தின் விளிம்பு
அன்றைய நாளில் மன்னர் சார்லஸ் மரணத்தை அருகில் சந்தித்து உயிர் தப்பியுள்ளார். ஆனாலும், தன் நண்பரின் மரணத்தால் அவர் நிலைகுலைந்து போயிருந்ததாக அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை