பிரான்சில் எரிபொருள் நெருக்கடி..! நீடித்த வரிசைகள்

பிரான்சில் எரிபொருள் நெருக்கடி நிலவுவதால் எரிபொருள் விநியோக நிலையங்களில் நீண்ட வரிசைகள் நீடிக்கின்றன.

பிரான்சில் உள்ள முக்கிய எரிபொருள் நிறுவனங்களில் வேதன உயர்வு கோரி பணிப்புறக்கணிப்புகள் இடம்பெறுவதால் மாசக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை நிலவிவருகின்றது.

பத்து நாட்களுக்கு மேலாக பணிப் புறப்பணிப்புகள் இடம்பெறுவதால் பிரான்சில் உள்ள 10 நிறுவனங்களில் 05 நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன.

 

 

இதன் விளைவாக பிரெஞ்சில் உள்ள 30% விநியோக சேவை நிறுவனங்கள் விநியோக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.