அமெரிக்க விமானத்தில் புகுந்த பாம்பு !

அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்த நியூஜெர்சிக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்த போது விமானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்து இருப்பது தெரிய வந்தது. பாம்பை கண்ட பயணிகள் அலறினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் நியூஜெர்சியில் தரையிறங்கியதும், வன அதிகாரிகள் குழு விமானத்துக்குள் சென்று பாம்பை பிடித்தனர். அந்த பாம்பு விஷ தன்மையற்றது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்துக்குள் பாம்பு எப்படி வந்தது என்பது தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.