பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க …சற்றுமுன் விஜய் ஆண்டனி ட்விட்-யாரை சொல்லியிருக்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் ஜுவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தின் இசையமைத்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் விஜய் ஆண்டனி.இவர் பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர், எடிட்டர் ஆகிய முகங்களையும் கொண்டுள்ளார்.

பின்பு “நான்” படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். முதலில் அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அவர், இப்போது தன் படங்களுக்கும் மற்ற இசையமைப்பாளர்களை வைத்து இசையமைத்து வருகின்றார்.

கடைசியாக அவரது நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியானது. எனினும் இதனை தொடர்ந்து தமிழரசன், அக்னி சிறகுகள், ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. மேலும் காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்னம், மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இவ்வாறுஇருக்கையில் விஜய் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.அதில் தெரிவித்துள்ளதாவது…

கடவுள் என் முன்னாடி வந்தா, ஜாதி மதம் கோயில் சாமியார் எல்லாரையும் உலகத்துல இருந்து எடுத்துட்டு, வறுமை கொலை கொள்ளைய ஒழிசிட்டு, பேசாம நீங்க எங்க கூடவே இருந்துருங்க சார்ன்னு, request-ஆ கேப்பேன்நீங்க என்ன கேப்பிங்க? என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்