மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஸ்யா தாக்குதல் – இருளில் மூழ்கிய உக்ரைன்!

தாக்குதல்

கிரீமியாவை ரஸ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஸ்யா உக்ரைன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

உக்ரைனில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஸ்யா நடத்திய தாக்குதலின் காரணமாக, கீவ் உள்ளிட்ட நகரங்கள் மின் தடையால் இருளில் மூழ்கியுள்ளன.

ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் கீவ் உள்ளிட்ட நகரங்களில் மின் தடையும், தண்ணீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

அழிக்கப்பட்ட 40 சதவீத மின் நிலையங்கள்

 

மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஸ்யா தாக்குதல் - இருளில் மூழ்கிய உக்ரைன்! | Ukraine Restrict Electricity Russia Power Plants

இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “உக்ரைனின் 40 சதவீத மின் நிலையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இதனால் நாடு முழுவதும் பெரும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து மின் உற்பத்தி பணியை சரிசெய்ய முயற்சி நடந்து வருகிறது.

மக்கள் மாலை நேரங்களில் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் மின் விநியோக சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியமில்லாத பயன்பாடு

 

 

மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஸ்யா தாக்குதல் - இருளில் மூழ்கிய உக்ரைன்! | Ukraine Restrict Electricity Russia Power Plants

இன்று முதல் அத்தியாவசியமில்லாத மின்சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,

அதிகமாக மின்சக்தியை நுகரும் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் மின்நுகர்வை கவனமாக பயன்படுத்தினால் அடுத்து வரும் நாட்களில் மின்தடை நேரம் படிப்படியாக குறைக்கப்படும்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.