பிக் பாஸ் வீட்டை விட்டு கண்ணீருடன் வெளியேறிய ஜி.பி. முத்து.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ

வெளியேறிய ஜி.பி. முத்து

சில நாட்களுக்கு முன், ஜி.பி. முத்து தனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை, தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் என்றும் கூறினார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதன்பின் ஜி.பி. முத்துவை சமாதானம் செய்து வீட்டிற்குள் இருக்க வைத்தார் பிக் பாஸ்.

ஆனால், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ள ஜி.பி. முத்து பிக் பாஸ் இடம் கூறிவிட்டு கண்ணீருடன் வெளியேறியுள்ளார்.

அதிர்ச்சியளிக்கும் வீடியோ

இது உங்களுடைய முடிவு என்றும், வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியே வாருங்கள் என்றும் பிக் பாஸ் கூறியுள்ளார்.

ஆனால், இவை அனைத்தும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை தத்ரூபமாக உண்மையாகவே ஜி.பி. முத்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பது போல் எடிட் செய்து ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது காட்டு தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்