தென் கொரியாவில் ஹலோவின் கூட்ட நெரிசலில் சிக்கி 140 மேற்பட்டோர் பலி

தென் கொரியாவின் ஈதவோன் நகரில் நேற்றிரவு இடம்பெற்ற ஹலோவீன் (Halloween) கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி இதுவரை 140 மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

   

இதில் இரு வெளிநாட்டவர் பலியாகியுள்ளதுடன், அதில் இலங்கையை, கண்டியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கு மேலாக 13 வெளி நாட்டவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இவர்களில் இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனரா? என ஊர்ஜிதமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. நகருக்கான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு அங்கிருப்போரை வெளியேற்றும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந் நிகழ்வில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்