‘சொன்னா கேளு..’.. உரிமையுடன் கண்டித்த ராபர்ட்.. கண்டுக்காமல் மழையை என்ஜாய் பண்ணிய ரச்சிதா

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

rachitha enjoying in rain Robert scolded her bigg boss 6 tamil

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் அரங்கேறிக் கொண்டிருந்த  டி.ஆர்.பி டாஸ்கில் போட்டியாளர்கள் அணிகளாகப் பிரிந்து கான்செப்ட் நாடகங்களில் நடித்தனர். அதன்படி ரச்சிதா, விக்ரமன், அமுதவாணன், ராபர்ட், செரினா, ஜனனி, ஆயிஷா, குயின்ஸி உள்ளிட்ட அனைவரும் இணைந்து ஓரணியாக, தாங்கள் தயார் செய்து வைத்திருந்த காமெடி சீரியல் ஸ்கிரிப்டில் நடித்தனர். இந்த ஸ்கிரிப்டில் நடிப்பதற்காக ஆளுமை மிக்க குடும்பத்தலைவி கதாபாத்திரத்தில் ரச்சிதா தயாராகி நடந்து வந்தார். அவரை பார்த்த ராபர்ட் மாஸ்டர் அவருடைய அழகு பற்றி புகழாரம் சூட்டினார்.

மேலும் அவருடைய மிரட்டலான பாவனையில் பயந்து போனதாக ராபர்ட் மாஸ்டர் விளையாட்டாக நடித்தார். ரச்சிதாவும் அவரை சொடக்கு போட்டு கையை காட்டி மட்டும் மிரட்டுவது போல் செய்தார். இதனைதொடர்ந்து ஸ்கிரிப்டில் அனைவரும் நடித்து முடித்தனர். பின்னர் மழை பெய்ய தொடங்கியது.

அப்போது ரச்சிதா பிக்பாஸ் வீட்டு தோட்ட பகுதியில் கண்டிப்புடனும் உரிமையுடனும், “ஏய்.. கமல் சார் வார இறுதியில் வருவார், அவரையெல்லாம் பார்க்க வேண்டாமா? சளி பிடிச்சுக்கும், ஜுரம் வந்துவிடும்..  சொன்னா கேளு..  உள்ளே வா.. 5 நிமிடம் என்று சொல்லி 25 நிமிடமாக  நனைந்துக் கொண்டிருக்கிறாய்..” என்று கடிந்து கொள்கிறார்.

ஆனாலும் ரச்சிதா வர மறுக்கிறார். அப்போது ராபர்ட் மாஸ்டரை பார்த்து அமுதவாணன் உள்ளிட்டோர், “மாஸ்டர் மழை பெய்கிறது.. ஒரு டான்ஸ் போடலாமே?” என்று கேட்கின்றனர்.. அதற்கு ராபர்ட் மாஸ்டர்,  “அட .. நானே அவளை திட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று புலம்பிக் கொண்டே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றுவிட்டார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்