அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு: வேதனை அடைந்த அதிபர் பைடன்

அமெரிக்காவில் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்றுக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கிழக்கு அல்லெக்னி மற்றும் கென்சிங்டன் பகுதியில் மதுபான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது.

 

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு: வேதனை அடைந்த அதிபர் பைடன் | Shooting In America Bar Joe Biden Is Saddened

இந்த நிலையில், நேற்றிரவு (05-11-2022)  மதுபான பாருக்கு வெளியே திடீரென்று மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது என்னவென தெரியவில்லை.

 

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு: வேதனை அடைந்த அதிபர் பைடன் | Shooting In America Bar Joe Biden Is Saddened

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் எதுவும் வெளிவரவில்லை. இதற்கு முன் வடக்கு கரோலினா பகுதியில் ராலே என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு வன்முறை சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்திற்கு அதிபர் பைடன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு: வேதனை அடைந்த அதிபர் பைடன் | Shooting In America Bar Joe Biden Is Saddened

அதில், அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என கண்டனம் தெரிவித்ததுடன், பல படுகொலைகள் செய்திகளாக வெளிவராமல் அதுபற்றி தெரிவது கூட இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.