இமானுவல் மேக்ரானை குலைநடுங்க வைத்த அதிபர் புடின்!

உக்ரைன் போர் தொடர்பான உரையாடலின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சு குறித்து பிரான்ஸ் ஜனாதிபதியிடம் விளாடிமிர் புடின்(Vladimir Putin) நினைவுப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிகட்ட முடிவாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) உக்ரைன் நகரங்கள் மீது அணுகுண்டு வீசும் நிலைக்கு தள்ளப்படுவார் என்றே அஞ்சப்படுகிறது.

மட்டுமின்றி, ரஷ்ய துருப்புகள் சமீப மாதங்களில் கடும் பின்னடைவை சந்தித்தும் வருகிறது.இந்த நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானிடம்(Emmanuel Macron) ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சு தொடர்பில் விளாடிமிர் புடின்(Vladimir Putin) பேசிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கையில், விளாடிமிர் புடின்(Vladimir Putin) கூறியதன் உண்மையான அர்த்தம், ஒரு நாட்டை வெற்றி கொள்ள ஒரு பெரிய நகரத்தைத் தாக்க வேண்டிய அவசியமில்லை என்பது தான் என குறிப்பிட்டுள்ளனர்.

இமானுவல் மேக்ரானை குலைநடுங்க வைத்த அதிபர் புடின்! | President Putin Shook Emmanuel Macron

 

ரஷ்யா ஏற்கனவே கடும் பின்னடைவை எதிர்கொண்டு வரும் நிலையிலேயே அணுகுண்டு வீச்சு தொடர்பில் புடின் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புடினின்(Vladimir Putin) அந்த கருத்து, ஜனாதிபதி மேக்ரானை(Emmanuel Macron) கொலைநடுங்க செய்துள்ளதாகவும், உக்ரைன் மீதான தமது திட்டத்தை புடின்(Vladimir Putin) வெளிப்படுத்தியதாக மேக்ரான் கருதியதாகவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, ஒரு முழு அணு ஆயுதப் போரைத் தூண்டாமல் பீதியை பரப்புவதற்காக புடின்(Vladimir Putin) கருங்கடல் மீது அணு ஆயுதத்தை வெடிக்கச் செய்யலாம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் அஞ்சுவதாக வதந்திகளும் பரவி வருகின்றன.

மேலும், ரஷ்யாவிற்கும் கிரிமியாவிற்கும் இடையிலான முக்கிய பாலத்தை உக்ரேனியப் படைகள் தாக்கிய பின்னர் தான் புடின் (Vladimir Putin)அடிக்கடி அணுகுண்டு வீச்சு தொடர்பில் கருத்து கூறி வருவதாக கூறப்படுகிறது.

1945 ஆகஸ்டு மாதம் ஜப்பானை வீழ்த்த ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதில் பெரும்பாண்மையான பொதுமக்கள் உட்பட மொத்தம் 350,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.