மன்னர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் அதனை அனுபவிக்கிறார்: நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் மார்டினி குடிப்பதாக அவரது நண்பர் கவுண்ட் டிபோர் கல்நோக்கி தெரிவித்துள்ளார்.

சேனல் 4ன் ஆவணப்படமான ‘The Real Windsors: The Outspoken Heir’ இன் ஒற்றை பகுதியாக அரச குடும்பத்தின் மது விருப்பங்களைப் பற்றிய நுண்ணிய விவரங்களை மன்னர் சார்லஸின் நண்பர் கவுண்ட் டிபோர் கல்நோக்கி (Count Tibor Kalnoky) வழங்கியுள்ளார்.

அதில் மன்னர் மூன்றாம் சார்லஸ் ட்ரான்சில்வேனியாவில் இருந்த போது, அப்போதைய இளவரசர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவு உணவுக்கு முன்பும் மார்டினி (Martini) மதுபானங்களை குடித்ததாக தெரிவித்துள்ளார்.

மன்னர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் அதனை அனுபவிக்கிறார்: நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல் | Uk King Charles Enjoys Martini Drink Every Day

மேலும், இரவு உணவிற்கு முன் ஒரு மார்டினியை மன்னர் விரும்புகிறார் என்பது நிச்சயம், அதற்காக அவர் தனது தனிப்பட்ட கிளாஸை பயன்படுத்துகிறார், அத்துடன் அதனை எங்கு சென்றாலும் மன்னர் எடுத்து செல்கிறார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

மார்டினி பல ஆண்டுகளாக மிகவும் பிரபலமான காக்டெய்ல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மன்னர் சார்லஸ் ஒவ்வொரு நாள் இரவும் அதனை அனுபவிக்கிறார்: நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல் | Uk King Charles Enjoys Martini Drink Every Day

மன்னரின் நண்பரான கவுண்ட் டிபோர் கல்நோக்கி, சார்லஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு ருமேனியாவின் ட்ரான்சில்வேனியாவில்(Transylvania) உள்ள விஸ்கிரியில் அவரைச் சந்தித்ததாகவும், மன்னர் நாட்டை மிகவும் நேசித்ததாகவும், அங்கு ஒரு சிறிய கிராமப்புற வீட்டை வாங்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.