ரஷ்யா – இந்தியா குறித்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்!

ரஷ்யா சார்பை இந்தியா குறைத்து கொண்டுள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா , ஆற்றல் மற்றும் பாதுகாப்பு உதவியில் நம்பகதன்மை வாய்ந்த நாடாக இல்லை என கூறியுள்ளார்.

உக்ரைனின் நலனில், இந்தியா கவனத்தில் கொண்டு உள்ளது. இதனால், ரஷ்யாவை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா குறைத்து கொண்டுள்ளது. எனினும், அது இந்தியாவின் சொந்த இருதரப்பு விவகாரம் ஆகும்.

ரஷ்ய பயணத்தில், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறிய தகவல்கள், ஐ.நா.வில் பிரதமர் மோடி கூறிய விசயங்களுடன் ஒத்து போகின்றன. இது போருக்கான சகாப்தம் அல்ல என பிரதமர் மோடி தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

ரஷ்யா - இந்தியா குறித்து அமெரிக்கா வெளியிட்ட தகவல்! | United States About Russia India

 

இதனால், போருக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. தூதுரக முறையில், பேச்சுவார்த்தை வழியே போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா விரும்புகிறது.

பொருளாதார, தூதரக, சமூக மற்றும் அரசியல் வலிமை கொண்ட இந்தியா போன்ற நாடுகளிடம் இருந்து இந்த செய்தியை ரஷ்யா கேட்டுள்ளது என அவர் சுட்டி காட்டியுள்ளார்.

இந்தியாவுடன் பொருளாதாரம், பாதுகாப்பு உறவுகள் மற்றும் ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் நல்லுறவை பேணவும், ஆழப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம் என நெட் பிரைஸ் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.