பிக் பாஸ் அதிரடியாக வெளியேற்றும் அடுத்த போட்டியாளர் இவர் தான்! நூலிழையில் தப்பிய ராம்…அனல் பறக்கும் ஓட்டிங்

பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளினால் விஜே மகேஸ்வரி வெளியேற போவதாக பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் போரடிக்காமல் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அதற்கு காரணம் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள்.

ஒவ்வொரு டாஸ்க்கிளும் பலரது உண்மை முகங்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றது.

பிக் பாஸ் அதிரடியாக வெளியேற்றும் அடுத்த போட்டியாளர் இவர் தான்! நூலிழையில் தப்பிய ராம்...அனல் பறக்கும் ஓட்டிங் | Bigg Boss Tamil 6 Who Will Evict This Week

அனல் பறக்கும் ஓட்டிங்

இந்நிலையில், அசீம், மகேஸ்வரி, தனலட்சுமி, ராம், ஏடிகே, விக்ரமன், ஆயிஷா உள்ளிட்ட 7 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

விக்ரமன் எப்போதும் முதல் ஆளாகவும் அவர் சேவ் ஆகிவிடுவார். ஆனால், இந்த வாரம் விக்ரமன் பல சிக்கலில் சிக்கியுள்ளார்.

அவருக்கு பதிலாக அசீம் ஆளே மாறியுள்ளார். அந்த வகையில் இந்த வாரம் அசீமுக்கு ரசிகர்கள் அதிக ஓட்டுக்களை போட்டு வருவதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.

முதலில் அசீமும், அடுத்து விக்ரமன் இந்த வாரம் காப்பாற்றப்படுவார்கள். இதேவேளை, இந்த வாரம் ஆபத்தான இடத்தில் 2 போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக் பாஸ் அதிரடியாக வெளியேற்றும் அடுத்த போட்டியாளர் இவர் தான்! நூலிழையில் தப்பிய ராம்...அனல் பறக்கும் ஓட்டிங் | Bigg Boss Tamil 6 Who Will Evict This Week

நூலிழையில் தப்பிய ராம்

ராம் மற்றும் விஜே மகேஸ்வரி இருவரும் ஓட்டிங்கில் கடைசி இரண்டு இடத்தில் உள்ளனர். இதுவரை எடுக்கப்பட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் கடைசி இடத்தில் விஜே மகேஸ்வரி இருந்து வருகின்றார்.

ஒரு சில ஓட்டு வித்தியாசத்தில் ராம் காப்பாற்றப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பார்க்கலாம் இந்த வாரமும் கடந்த வாரங்களை போலவே ரசிகர்களின் கணிப்பு பலிக்குமா என்பதை.

 

Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.