லவ் டுடே படம் பார்த்த சூப்பர்ஸ்டார்! பிரதீப்பை நேரில் அழைத்து செய்த விஷயம்
லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் டுடே படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
பெரிய ஸ்டார் cast இல்லாமல் ஒரு படம் அதன் கதைக்காக அதிகம் பேசப்படுவது சமீப காலத்தில் இந்த படம் தான். தற்போது வரை தியேட்டர்களில் நல்ல வசூல் ஈட்டிக்கொண்டிருக்கும் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி அளவுக்கு வசூலித்து இருக்கிறது.
அழைத்து பாராட்டிய ரஜினி
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினி பிரதீப் ரங்கநாதனை அழைத்து பாராட்டி இருக்கிறார். அது மட்டுமின்றி அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தி இருக்கிறார்.
“இதைவிட வேறு என்ன எனக்கு வேண்டும். சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. அந்த tight hug, அந்த கண்கள், அந்த சிரிப்பு, அந்த ஸ்டைல், அன்பு.. What a personality சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார். நீங்கள் சொன்னதை எப்போதும் மறக்க மாட்டேன் சார்” என பிரதீப் ரங்கநாதன் குறிப்பிட்டு இருக்கறார்.
by RMTM
கருத்துக்களேதுமில்லை