சீரியல் நடிகை மகாலட்சுமி கர்ப்பமாக உள்ளாரா?- இதோ புகைப்படம்

சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போது பிரபல சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை மகாலட்சுமி.

இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வெற்றி நாயகியாக வந்தாலும் சொந்த வாழ்க்கையால் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.

முதல் திருமணம் விவாகரத்தில் முடிய பின் இன்னொரு சீரியல் நடிகருடன் கிசுகிசுவில் சிக்கி பல சர்ச்சைகளில் சிக்கினர்.

இப்போது அதில் இருந்து வெளியே வந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கர்ப்பமாக இருக்கிறாரா?

செப்டம்பர் 1ம் தேதி இருவருக்கும் திருப்பதியில் சிம்பிளான முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது.

தற்போது ரவீந்தர் அண்மையில் ஒரு புகைப்படம் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறாரா என பேச தொடங்கியுள்ளனர். காரணம் அந்த புகைப்படத்தில் அவரது வயிறு கொஞ்சம் பெரியதாக தெரிகிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்