நீண்ட பாதங்கள் -அமெரிக்காவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த டான்யா என்ற பெண், உலகில் மிக நீண்ட பாதங்களை கொண்டதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டான்யா ஹெர்பர்ட் என்பவரே கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவராவார்.

சுமார் 6 புள்ளி 9 அடி உயரம் கொண்ட அந்த பெண் உலகிலேயே உயரமான பெண்ணை விட மூன்று இன்ச் தான் உயரம் குறைவானவர். இந்நிலையில், இவரது வலது பாதம் 13 புள்ளி 3 இன்ச் உயரமும், இடது பாதம் 12 புள்ளி 79 இன்ச் உயரமும் கொண்டுள்ளது. தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருமே அதிக உயரம் கொண்டவர்கள் என்பதால் மரபு ரீதியாக தாமும் உயரமாக பிறந்துவிட்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.

 

இந்த சாதனை குறித்து தான்யா கூறுகையில், “உலகில் மிகப்பெரிய பாதங்களைக் கொண்ட பெண் என்பதற்காக நான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன்.

எனது பாதங்கள் 33 செ.மீ நீளமுடையவை. நான் 16, 17 அளவுள்ள ஆண்களின் காலணிகளையும், 18 அளவுள்ள பெண்களின் காலணிகளையும் அணிவேன். நான் 6. 9 அடி உயரம். ஆச்சரியமாக, நான் உலகின் மிக உயரமான பெண்ணை விட 3 இன்ச் மட்டுமே குறைவு. கடைகளில் எனக்கேற்ற காலணிகள் கிடைப்பதில்லை.

நீண்ட பாதங்கள் -அமெரிக்காவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெண் | New Record Holder For The Worlds Largest Feet

 

எனவே என்னுடைய காலணிகளை எப்போதும் ஒன்லைனில் தான் வாங்குவேன். வளரும் போதும் சுற்றியுள்ள அனைவரையும் விட, நானே உயரமானவளாக இருப்பேன். என்னுடைய அம்மா 6.5 அடி, அப்பா 6.4 அடி, அதனால் நான் உயரமாய் இருப்பதை விட வேறு வழியில்லை என கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.