விஞ்ஞானப் பரிசோதனையில் ஏற்பட்ட கோளாறு; மாணவர்களுக்கு நேர்ந்த நிலை!
அவுஸ்திரேலியா பாடசாலையொன்றில் விஞ்ஞானப் பரிசோதனையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
சிட்னியிலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணியளவில் இச்ம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் 10 முதல் 11 வயதானவர்கள்
காயமடைந்தவர்கள் 10 முதல் 11 வயதானவர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலருக்கு முகம், நெஞ்சு, கால்கள் உட்பட பல பகுதிகளில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்தபட்சம் இரு மாணவர்கள் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் சம்பவத்தில் ஆசிரியர் ஒருவருக்கும் சிறு காயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோடியம் இரு காபனேற்று மற்றும் மெதைல் அடங்கிய ஸ்பிரிட் தொடர்பான பரிசோதனை ஒன்றின்போது இச்சம்பவம் ஏற்பட்டதாக அவுஸ்திரேலிய தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது.
அதேசமயம் காற்றும் இச்சம்பவத்திற்கு காரணமாகியதாக நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் அம்பியூலன்ஸ் சேவையின் பதில் அத்தியட்சகர் பில் டெம்பிள்மேன் கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
கருத்துக்களேதுமில்லை