இடமாற்றம் செய்யப்படும் லண்டனின் அருங்காட்சியகம்!

லண்டனின் அருங்காட்சியகம் 250 மில்லியன் பவுண்டு செலவில் இடமாற்றம் செய்யவிருக்கிறது.

1978ஆம் ஆண்டில் லண்டனின் The City எனப்படும் நிதி மையத்தில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

ஆனால் அந்த இடத்தைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாதது ஒரு சவாலாய் இருந்ததாக அரும்பொருளகத்தின் இயக்குநர் கூறினார்.

லண்டனின் பயன்படுத்தப்படாத சந்தைக் கட்டடத்திற்கு அரும்பொருளகம் மாற்றியமைக்கப்படும்.

இடமாற்றம் செய்யப்படும் லண்டனின் அருங்காட்சியகம்! | London S Museum Of Relocation

 

இடம் மாறிச் செல்லும் பொருள்களில் மன்னன் முதலாம் சார்லஸ் மரணதண்டனையின்போது அணிந்திருந்த அங்கியும் 20,000 மனித உடற்பாகங்களும் உள்ளடங்கும்.

6 மில்லியனுக்கும் அதிகமான கலைப்பொருள்களைக் கொண்ட அந்த அருங்காட்சியகம்உலகின் மிகப்பெரிய நகர்ப்புற வரலாற்றுத் தொகுப்பைக் கொண்டுள்ளது.

இடமாற்றம் இவ்வாண்டு டிசம்பர் 5 முதல் 3 வருட காலத்திற்கு நீடிக்கும் என தெரியவந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்