அனல் பறக்கும் ஓட்டிங்! அதிரடியாக வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்.. ஷாக்கில் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் இப்போதே யூகிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்தது. இது போட்டியாளர்களுக்குள் ஒருவரை ஒருவர் நேரடியாக தாக்கும் விதமாகவே இருந்தது.
மைனா இந்த வாரத்தின் தலைவராக உள்ளார்.
இந்த வாரம் தனலட்சுமி, அசீம் ,ராம், மணிகண்டன், அமுதவாணன், கதிரவன் ,ராபர்ட் என ஏழு பேர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர்.
அசீம் மற்றும் தனலட்சுமி அதிகமாக சண்டை போட்டாலும் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது.
அதிரடியாக வெளியேற போகும் முக்கிய போட்டியாளர்
இதனால், இவர்கள் வெளியில் போக வாய்ப்பு இல்லை. அதே போல அழுதவாணன் ,மணிகண்டன் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதே போன்று, திடீரென்று கதிரவனும் தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
இதில் ஆபத்தான இடத்தில் இருப்பது ராபர்ட் மாஸ்டர், ராம் தான்.
ராபர்ட் மாஸ்டர் நன்றாக விளையாடினாலும், காதல் சர்ச்சையில் சிக்கி ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகின்றார்.
மேலும், பிக் பாஸில் ராம் இருக்கின்றாரா என்றே சில வேளைகளில் தெரிவது இல்லை. எனவே முக்கிய போட்டியாளராக இருக்கும் ராபட் வெளியேற வாய்ப்பு உள்ளது.
எனினும் ரசிகர்கள் அவரை காப்பாற்றினாலும் இந்த வாரம் ராம் நிச்சயம் வெளியேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம் ரசிகர்களின் கணிப்பு இந்தவாரமும் பலிக்குமா என்று.
கருத்துக்களேதுமில்லை