கனடாவை உலுக்கிய துன்பியல்..! ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு – ஆபத்தான நிலையில் ஒருவர்

கனடா – ஒன்ராறியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை டிரம்மண்ட் லைன் அருகே நெடுஞ்சாலை 7 இல் மாலை 5:15 மணியளவில் குறித்த விபத்து நடந்துள்ளது.

 

இதில், எஸ்யூவி மற்றும் பிக் -அப் ட்ரக் ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.

அந்த பிக்-அப் ட்ரக்கின் சாரதி காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு

கனடாவை உலுக்கிய துன்பியல்..! ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு - ஆபத்தான நிலையில் ஒருவர் | Accidental Deaths Canada

விபத்தில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பில் தகவல் வெளியிட்ட காவல்துறையினர், Stephanie Hart, Jonathan Macdonnell மற்றும் இவர்களது 18 வயது மகன் Riddick Hart எனத் தெரிவித்துள்ளனர்.

இவர்களுடன் சென்ற 14 வயது Rowghan என்பவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்