கனடாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இலங்கை தமிழ் பெண்!

கனடா – மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் காயமடைந்த தமிழ் பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமடைந்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு தமிழர்கள் உயிரிழந்தனர்.

மார்க்கம் வீதி மற்றும் Elson நெருவில் சந்திப்புகளுக்கு அருகாமையில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார்.

மூன்று பேர் பயணித்த Acura வாகனத்துடன் பார ஊர்தி மோதியதில் வாகனத்தின் சாரதியான 21 வயதான இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

 

முன் இருக்கையில் பயணித்த மூன்றாவது பயணியான 52 வயது பெண் உயிர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த பெண் புதன்கிழமை மரணமடைந்தார்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் பொலிஸார் வெளியிடப்படவில்லை. ஆனாலும் பலியானவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், இரண்டு பிள்ளைகள் என தெரியவருகிறது.

இந்த வாகன விபத்தில் Vaughan நகரை சேர்ந்த 46 வயதான பார ஊர்தி ஓட்டுநர் மீது ஏற்கனவே மூன்று குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. மேலும் இவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் எதிர் கொள்ளவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்