உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் கார் அறிமுகம்!

நெதர்லாந்தின் லைட் இயர் கார் நிறுவனம் உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் காரை உருவாக்கி வருகிறது.

வழக்கமான மின்சார செடான் மாடல் கார் போல தோற்றமளிக்கும் லைட்இயர்- 0 என்ற இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 43 மைல் தூரம் வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

உலகின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் கார் அறிமுகம்! | Introducing The World S First Solar Powered Car

 

முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 388 மைல் தூரம் வரை பயணிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 2 லட்சத்து 59 ஆயிரம் டாலர்கள் விலையில் இந்த கார் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 31 ஆயிரத்து 500 டாலர்கள் ஆரம்ப விலையில் மற்றொரு வாகனம் தயாரிக்க இருப்பதாகவும், இந்த வாகனம் 2025-ம் ஆண்டுக்குள் உற்பத்திக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.