டுவிட்டரில் குவியும் விளம்பரங்கள்

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கிய நிலையில் தற்போது அந்நிறுவனத்திற்கு விளம்பரங்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் போலி கணக்குகளை நீக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேபோல் புளூடிக் கணக்கிற்கு கட்டணம் அறவிட்டார் என்பதும் தெரிந்ததே.

டுவிட்டரில் குவியும் விளம்பரங்கள் | Advertisements On Twitter

இந்த நிலையில் அமேசான் நிறுவனம் டுவிட்டரில் 100 மில்லியன் டொலர் வருடத்துக்கு விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே அப்பிள் நிறுவனமும் டுவிட்டரில் விளம்பரம் செய்ய தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே டுவிட்டர் நிறுவனத்தின் முதலீடு செய்த தொகையை ஒரு சில ஆண்டுகளில் எலான் மஸ்க் எடுத்து விடுவார் என்று கூறப்பட்டு வருகிறது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.