கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் -உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு

கனடாவில் லொட்டரியில் $5 மில்லியன் பரிசு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு விழுந்துள்ள நிலையில் இதுவரையில் எவரும் அதற்கு உரிமை கோரவில்லை என தெரியவந்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் லொட்டோ 6/49 டிக்கெட்டுக்கு $5 மில்லியன் (ரூ.1,36,99,81,837.50) பரிசு விழுந்துள்ளது.

ஆனால் அந்த பரிசு தொகை இதுவரை கேட்பாரற்று உள்ளது. பரிசு தொகைக்காக யாரும் இன்னும் உரிமை கோரவில்லை.

கனடாவில் லொட்டரியில் விழுந்த கோடிக்கணக்கான பணம் -உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு | Millions Of Money In Lottery In Canada

லொட்டரி பரிசு வென்றவர்கள் தங்கள் பரிசைப் பெற 52 வாரங்கள் வரை அவகாசம் உள்ளது.

2022ல் இதுவரையில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லொட்டோ 6/49 ல் $101 மில்லியனுக்கும் அதிகமாக பரிசை பலரும் வென்றுள்ளனர். தற்போது $5 மில்லியன் பரிசு விழுந்த லொட்டரி டிக்கெட் எப்போது வாங்கப்பட்டது என்ற விபரமும் தெரியவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்