பிரித்தானியாவில் வெடிப்புச் சம்பவம்! தரைமட்டமான கட்டிடம் – மூவர் பலி

பிரித்தானியாவின் ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று(10) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எரிவாயு கசிவே வெடிப்புக்கு காரணமென ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் வெடிப்புச் சம்பவம்! தரைமட்டமான கட்டிடம் - மூவர் பலி | Blast In Residential Area In Uk Update

மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென வெடிப்புச் சத்தம் எழுந்தது. சத்தம் வந்த சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டிடம் முழுமையாக சிதைந்து தரைமட்டமாகியுள்ளது.

அதில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதுடன், அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்துள்ளது.

விபத்து பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பிரித்தானியாவில் வெடிப்புச் சம்பவம்! தரைமட்டமான கட்டிடம் - மூவர் பலி | Blast In Residential Area In Uk Update

 

இந்த விபத்தில் மூவர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதாக ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்