ஒன்றாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஒன்றாரியோவின் தென் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பனிப்புயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு, பனி மழை என்பனவற்றை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Ontario Storm December 15 Warning

 

கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில பகுதிகளில் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றாடல் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிலவி வரும் தாழமுக்க நிலையானது தென் ஒன்றாரியோவை கடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ஹமில்டன் முதல் லண்டன் வரையிலான பகுதிகளில் பனி மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

றொரன்டோவில் சுமார் 15 சென்றி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலை பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, விமானப் பயணிகள் காலநிலை முன்னறிப்புக்களை அவதானிக்குமாறு பியர்சன் சர்வதேச விமான சேவை நிறுனம் கோரியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்