வாரிசு படத்தின் கதை இதுதானா.. அப்போ படம் வெற்றியா? தோல்வியா?

விஜய்யின் நடிப்பில் வம்சியின் இயக்கத்தில் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு.

தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்க, ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

வாரிசு படத்தின் கதை இதுதானா.. அப்போ படம் வெற்றியா? தோல்வியா? | Varisu Movie Story

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த ரஞ்சிதமே, தீ தளபதி என இரு பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

 

இதை தொடர்ந்து வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில், வாரிசு படத்தின் கதை இதுதான் என்று கூறி தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் கதைப்படி ‘கவலையில்லாமல் வாழ்ந்து வரும் இளைஞர் தான் தளபதி விஜய். ஆனால், திடீரென விஜய்யின் வாழ்க்கையில் அனைத்தும் மாற, அவருடைய வளர்ப்பு தந்தை மரணமடைகிறார். இதனால் அவருடைய கோடிக்கணக்கான தொழிலை ஒரு மகனாக எடுத்து நடத்தி அதில் வரும் எதிர்ப்புகளை எப்படி விஜய் எதிர்கொள்கிறார்’ என்பது தான் வாரிசு படத்தின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்