லண்டனில் நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ் – வைரலாகும் காணொளி

74 வயதான மன்னர் சார்லஸ் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இசைக்கேற்ப நடனமாடி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் அரியணை ஏறிய மன்னர் 3ஆம் சார்லஸ் நாடு முழுவதும் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

லண்டனில் நடனமாடி அசத்திய மன்னர் சார்லஸ் - வைரலாகும் காணொளி | King Charles Dance London Viral Video

 

அந்த வகையில் லண்டனில் உள்ள யூத சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் 3ஆம் சார்லஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது 74 வயதான மன்னர் சார்லஸ் அங்கிருந்த நபர்களுடன் சேர்ந்து இசைக்கேற்ப நடனமாடி அசத்தினார்.

மன்னர் உற்சாகமாக நடனமாடிய அந்தக் காணொளி பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.

காணொளி வெளியான சிறிது நேரத்திலேயே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்தக் காணொளியை பார்த்தனர்.

அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்